கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x

பழைய தர்மபுரியில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

தர்மபுரி

பழைய தர்மபுரியில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

பள்ளி மாணவன்

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் சச்சின் (வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை என்பதால் மாணவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றான். இரவு வெகு நேரமாகியும் மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவனை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தேடினர். அப்போது மாணவன் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சச்சின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் குளிக்க சென்றபோது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story