விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவர் ஆம்புலன்சில் வந்து பிளஸ்-1 தேர்வு எழுதினார்


விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவர் ஆம்புலன்சில் வந்து பிளஸ்-1 தேர்வு எழுதினார்
x

விருதுநகரில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவர் ஆம்புலன்சில் வந்து பிளஸ்-1 தேர்வு எழுதினார்

விருதுநகர்


விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் காரியாபட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடைய மகன் நவீன் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 29-ந் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் கடந்த 2 மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று பிளஸ்-1 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர் நவீன் நடக்க முடியாத நிலையில் ஆம்புலன்சில் தனது பெற்றோரின் உதவியுடன் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். அவர் ஸ்டெச்சரில் தேர்வு அறைக்கு தூக்கிச் செல்லப்பட்டு, அங்கு வைத்து உதவியாளரிடம் சொல்லி தேர்வு எழுதினார். ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத ஏன் அனுமதிக்கவில்லை என்று தேர்வு அதிகாரியிடம் கேட்டபோது, குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் மாணவர் நவீன் இல்லாத காரணத்தால் தேர்வு அறைக்குள் தேர்வு எழுத அனுமதித்ததாக தெரிவித்தார். பள்ளி நிர்வாகத்தினரும் மாணவரின் உடல் நிலையை கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


Next Story