விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சாவு


விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சாவு
x

கருங்கல் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சாவு

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெயராஜ். இவரது மகன் எட்வின் ஏசுதாஸ் (வயது17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று எட்வின் ஏசுதாஸ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல்-குளச்சல் சாலையில் ெசன்று கொண்டிருந்தார். வெள்ளியாவிளை பகுதியில் சென்ற ேபாது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலைேயாரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த எட்வின் ஏசுதாஸ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் நண்பர் காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story