மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ-மாணவிகள்


மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
x

மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

அரியலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அந்த அரங்கை 10 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிடலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கண்காட்சி அரங்கில் மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சின்போது கிடைத்த செப்புப் பொருட்கள், செப்பு காசுகள், தங்க காப்பு, தந்தத்தினாலான பொருட்கள், இரும்பினாலான ஆணிகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சீன பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 600-க்கும் மேற்பட்ட பண்டைய காலப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொல்லாபுரத்தில் உள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் இந்த அரங்கினை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் வந்து பார்வையிட்டு நமது முன்னோர்களின் வாழ்வியல் முறை, கலாசாரம், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story