கர்நாடக தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்-மாணிக்கம்தாகூர் எம்.பி. கருத்து


கர்நாடக தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்-மாணிக்கம்தாகூர் எம்.பி. கருத்து
x

கர்நாடக தேர்தலில் பணபலம், மத அரசியலை மக்கள் முறியடித்துள்ளனர். இது வருகின்ற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கை ஓங்குவதற்கான அச்சாரம் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கருத்து தெரிவித்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

கர்நாடக தேர்தலில் பணபலம், மத அரசியலை மக்கள் முறியடித்துள்ளனர். இது வருகின்ற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கை ஓங்குவதற்கான அச்சாரம் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கருத்து தெரிவித்தார்.

வெறுப்பு அரசியலுக்கு பாடம்

மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர். பொய்யான வாக்குறுதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசியதை பொய் என்று பிரதமர் நரேந்திர மோடியின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் மக்களை ஈர்த்துள்ளது. அதே சமயம் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான மக்களின் தீர்ப்பாக கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அமைந்து உள்ளது.

பணபலம்-மத அரசியல் எடுபடவில்லை

பணபலத்தால் மக்களை வென்றுவிடலாம். மத அரசியலால் மக்களை திசைதிருப்பிவிடலாம் என்று கங்கனம் கட்டிகொண்டு நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். மக்கள் பணபலம், மத அரசியலை முறியடித்து ராகுல் காந்தியின் கையை ஓங்க செய்துள்ளனர். அதற்காக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளுவதில் பெருமை அடைகிறேன்.

கர்நாடக தேர்தலில் மிகவும் முக்கியமான 5 வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றும் என்று வாக்காளர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆகவே காங்கிரசை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 5 வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக ராகுல் காந்தி செயல்படுவார். கர்நாடக தேர்தலில் மக்களால் பண பலம், மத அரசியல் முறியடிக்கப்பட்டு இருப்பது வருகின்ற 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியின் கை ஓங்குவதற்கு அச்சாரமாக அமைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story