தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது
சிவகங்கை
திருப்புவனம்
திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி செல்வம். இவருடைய மனைவி பானுப்பிரியா(வயது 28), இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானுப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே பானுப்பிரியாவின் உடலை போலீசாருக்கு தெரியாமல் குடும்பத்தினர் எரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்கண்ணா திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். பெண்ணுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் இந்த தற்கொலை தொடர்பாக சிவகங்கை கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story