நடந்தே சென்று குறைகளை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு


நடந்தே சென்று குறைகளை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு
x

வாணியம்பாடியில் போலீஸ் சூப்பிரண்டு நடந்தே சென்று குறைகளை கேட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீர் என வாணியம்பாடிக்கு வந்து பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளுக்கு நடந்தே சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் மக்களிடம் நேரடியாக கேட்டார். தொடர்ந்து காதர் பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வீதிகளில் சென்று மக்கள் குறைகளை கேட்டது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story