தாலுகா அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகை
x

அரக்கோணத்தில் தாலுகா அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் இருளர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் எந்த வசதியும் இல்லாத நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். எனவே, மேல்பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறைக்கு சொந்தமாக உள்ள 10 ஏக்கர் நிலத்தில் இருளர் இன மக்கள் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அரக்கோணம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களுடன் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் 80-க்கும் மேற்பட்டோர் திடீரென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story