2 கோடி பாமாயில் பாக்கெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்


2 கோடி பாமாயில் பாக்கெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
x

2 கோடி பாமாயில் பாக்கெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இதுதவிர தமிழகத்தில் சிறப்புபொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை தலா ரூ.25 என்ற மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு குறிப்பிட்ட விலையில் இந்த பொருட்களை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வழங்குகிறது.

இந்த நிலையில், தற்போது ஒரு லிட்டர் அளவு கொண்ட 2 கோடி பாமாயில் பாக்கெட்களை ரூ.194.52 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை உணவுத் துறையின்கீழ் வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரியுள்ளது.


Next Story