"கண்ணை இமை காப்பதுபோல, அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தமிழ்நாடு அரசு காக்கும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பணிக்கு சென்று வெளிநாடுகளில் இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் தரப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
அயலகத் தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாடியபடி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டார்.
அயலக தமிழர்களுக்கு புதிய நலத்திட்டங்கள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் 2-வது நாளாக நடைபெற்றது. இந்த விழாவில் அயலகத் தமிழர்களுக்கான திட்டங்கள் தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசியதாது:-
எந்த நாட்டிற்கு சென்றாலும் உழைப்பால் தன்னை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்துபவர்கள் தமிழர்கள்.உலக நாடுகளில் பல நிலைகளில் தவிர்க்க முடியாக சக்தியாக தமிழர்கள் விளங்குகிறார்கள். 2000 ஆண்டுக்கு முன்பே உலகிலுள்ள பிறநாடுகளோடு நல்லுறவை கொண்ட பெருமை தமிழர்களுக்கு உண்டு. அயலக தமிழர்கள் பணி புரியும் இடத்தில் ஏமாற்றம் அடையும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, கல்வி உதவித்தொகை திட்டம் அமல்படுத்தப்படும்.
வாக்குறுதி அளித்தது போல் திமுக அரசு அயலக தமிழர்களுக்கான தனி அமைசகம் உருவாக்கியது. வெளிநாடு வாழ் தமிழர்கள் பாதுகாப்பு முன்னேற்றத்திற்காக திட்டங்கள் தீட்டியது தமிழக அரசு
அயலக தமிழர்களை ஒருங்கிணைக்க பல்வேறு ஏற்பாடுகள் திமுக அரசு செய்துள்ளது.புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் ஆவணப்படுத்தப்படும்.
ஆண்டுதோறும் 200 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு பண்பாட்டு சுற்றுலா வர ஏற்பாடு செய்யப்படும்.அயல்நாடுகளில் இறந்த தமிழர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பலநாடுகளிலும் தவிர்க்கமுடியாத சக்தியாக தமிழர்கள் விளங்குகின்றனர்.
தமிழர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றார்களோ அங்கேல்லாம் செழிக்க செய்துள்ளனர். பணிக்கு சென்று வெளிநாடுகளில் இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் தரப்படும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தரவுகள் சேகரிக்கப்படும். கொரோனா காலத்தில் 80,000 தமிழர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கண்ணை இமை காப்பதுபோல, அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தமிழ்நாடு அரசு காக்கும்.
பணிக்கு சென்று வெளிநாடுகளில் இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் தரப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.