தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

நெல்லை டவுனில் தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் தண்ணீரில் மாசு ஏற்படுத்திய நபர்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு செயலாளர் ரூபன் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன், வக்கீல் அணி செயலாளர் அறிவரசு, தொகுதி செயலாளர்கள் கோவிந்தன், ராஜா, காளிதாஸ் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்புலிகள் கட்சி மாநில பொறுப்பாளர் விடியல் வீரபெருமாள், கொள்கை பரப்பு செயலாளர் துர்கா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story