வேலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு


வேலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
x

வேலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பசுமை குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 15 நாட்களுக்குள் ஒவ்வொரு துறையும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் விவரங்களை தெரிவிக்க வேண்டும். குடியாத்தம்-காட்பாடி சாலை விரிவாக்கத்தின்போது மரங்கள் அகற்றப்பட்டது. அங்கு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். குடியாத்தம், அகரம்சேரியில் மரக்கன்றுகள் வளர்க்க நர்சரி அமைக்கப்படும் என்று கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.


Next Story