மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கிடும் பணி
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கிடும் பணி நடந்தது.
சிவகிரி:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வாசுதேவநல்லூர் தொகுதிக்கு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கிடும் பணி நடந்தது. இதற்காக தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட தனி அறை சிவகிரி தாசில்தார் செல்வகுமார், தேர்தல் துணை தாசில்தார் பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடசேகர், மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் அலுவலர் சரவணக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கிடப்பட்டு, வருகிற 15-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.