சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி


தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வாரிய அலுவலகம், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதேபோன்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பகுதி அலுவலகமும், சொந்த கட்டிடம் இன்றி நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

மேற்கண்ட அலுவலகங்களுக்கு, சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடம் வழங்குமாறு வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு தலைமையில் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிக்குமார், கிராம உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் நில அளவை அதிகாரிகள் இணைந்து வால்பாறை நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறியும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிவடைந்ததும், அந்த அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story