ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரம்


ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரம்
x

புதுக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்பட கடைவீதிகளிலும், தெற்கு ராஜ வீதியிலும் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் டி.வி.எஸ்.கார்னர் பகுதியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடை வியாபாரிகள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் அந்த பகுதியில் சாலை விசாலமாக காணப்பட்டது.


Next Story