டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்


டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மத்திய ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் குத்தாலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் பேரூர் தலைவர் ரமேஷ் வரவேற்றார். இதில் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் சந்தோஷ் கலந்துகொண்டு பேசினார்.கூட்டத்தில் குத்தாலம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நாடாளுமன்றதேர்தல், கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story