மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்த நிலையில் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில், பள்ளி ஆசிரியர் தென்காசி கோகுல் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் (54), நாகல்குளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர் (22) ஆகிய 2 பேரும் அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர். சங்கரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story