காவல்துறை உடை அணிந்து பாடம் நடத்திய ஆசிரியை


காவல்துறை உடை அணிந்து பாடம் நடத்திய ஆசிரியை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே காவல்துறை உடை அணிந்து பாடம் நடத்திய ஆசிரியை

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

தமிழக அரசு சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எளிமையாக பாடங்கள் நடத்திட ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சி நடத்தி அதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு எழுத்து தேர்வு, கவிதை, கட்டுரை போட்டி என பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள க.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் வகுப்பாசிரியர் அஞ்சுகம் போலீஸ் உடை அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அதேபோல் மாணவ-மாணவிகளும் டாக்டர், தபால் ஊழியர், விவசாயி, சமையல் கலைஞர், செவிலியர், ராணுவவீரர், விஞ்ஞானி என மாறுவேடம் அணிந்து வகுப்புக்கு வந்து பாடங்களை கவனித்தனர். வகுப்பு ஆசிரியர் காவல்துறை உடையில் வந்து பாடம் நடத்தியது பள்ளி குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.


Next Story