மயங்கி விழுந்து வாலிபர் சாவு


மயங்கி விழுந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் தச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் நாகுமலை (வயது 30) இவர் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ராதானூர் - சித்தலூர் ரோட்டில் தார்சாலை போடும் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆனந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது சகோதரி நாகஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story