வாலிபர் மர்ம சாவு
சேரன்மாதேவி அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியை அடுத்த கங்கணாங்குளம் பட்டங்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் நடராஜன் என்ற நர்கீஸ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் அத்துமீறி சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் நடராஜனை அருகிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் வந்து சமரசம் செய்து நடராஜனை விடுவித்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை நடராஜன் இறந்தார். இதனை அறிந்த சேரன்மாதேவி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மர்ம சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story