வாலிபர் `திடீர்' சாவு


வாலிபர் `திடீர் சாவு
x

வடமாநில வாலிபர் `திடீர்' சாவு

திருநெல்வேலி

நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரினாத் நாயக் மகன் தபு நாயக் (வயது 20) உள்ளிட்டவர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் தபு நாயக்குக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story