வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 1:00 AM IST (Updated: 13 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம் அருகே கூத்தபாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது24). இவர் ஈரோடு பள்ளிபாளையம் பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி வெண்ணிலா (20). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உடனடியாக சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசாரிடம் முருகன் கூறும்போது, எனது தந்தை சேட்டுக்கு இரு மகன்கள் உள்ளனர். எனக்கு கடன் பிரச்சினை இருப்பதால், என் தந்தைக்கு சொந்தமான சொத்தில் எனக்கு தர வேண்டிய பங்கை பிரித்து தருமாறு கேட்டார். அவர் தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக போலீசாரை அணுகிய போது அவர்கள் கோர்ட்டை அணுகி தீர்வு காணும்படி கூறினார்கள். எனவே வேறு வழி தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் எனது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து முருகன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை விசாரணைக்காக தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story