மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x

பள்ளிபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

திருச்செங்கோடு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் நல்லதம்பி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பள்ளிபாளையம் வசந்த நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story
  • chat