டாக்டரை தாக்கிய வாலிபர் கைது


டாக்டரை தாக்கிய வாலிபர் கைது
x

ஓசூரில் டாக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன் (வயது38). இவர், ஓசூர் ஆவலப்பள்ளி அருகே திம்மசந்திரத்தில் தனியார் கிளினிக்கில் சித்தா டாக்டராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர், கிளினிக்கில் தூங்கி கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மதன் (25), மத்திகிரி அருகே குருபட்டியை சேர்ந்த நவீன் (22) ஆகிய இருவரும் அங்கு வந்து நாப்கின் கேட்டனர். ஜாகீர் உசேன் அதனை கொடுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் ஜாகீர் உசேனை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். மதன், நவீன் இருவர் மீதும் அட்கோ போலீசில் ஏற்கனவே வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story