ஓராண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


ஓராண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

சேலத்தில் 400 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஓராண்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம் மாவட்டம் கருமந்துறை பகடுபட்டு பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 33). இவர் கடந்த ஜனவரி மாதம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கருமந்துறைக்கு சரக்கு வாகனத்தில் 400 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றார். அப்போது, அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த வழக்கில் சாமிதுரை கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் சங்ககிரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று சங்ககிரிக்கு சென்று சாமிதுரையை தேடினர். பின்னர் அந்த பகுதியில் நின்றிருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story