வாலிபர் கைது


வாலிபர் கைது
x

பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவன்பாண்டி (வயது 45). இவர் தனியார் மீன் நிறுவனத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து நிறுவனத்திற்கு வரும் பணியாளர்களை பஸ்சில் சென்று அழைத்து வருவார். வேலை முடிந்த பின்னர் பணியாளர்களை அந்தந்த ஊர்களில் பஸ்சில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்.

இந்த நிலையில் சிவன்பாண்டி சீவலப்பேரி பகுதியில் பணியாளர்களை இறக்கி விட பஸ்சில் அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த சீவலப்பேரியை சேர்ந்த ராமர் மகன் அழகுராஜா (25) என்பவர் பஸ்சை வழிமறித்து தகராறு செய்தார். தகராறு முற்றவே அங்கு கிடந்த கல்லை எடுத்து வீசி பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜாவை கைது செய்தார்.


Next Story