கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x

காவேரிப்பட்டணத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் (வயது22) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story