சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
கிருஷ்ணகிரி அருகே நானும் ரவுடி தான் என சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 19). இவர் தனது நண்பர்களுடன் கடந்த 11-ந் தேதி பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே சென்ற அதேபகுதியை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை தாக்கினார்கள். இது குறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். இதனிடையே அசோக், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகை பிடிப்பது, நானும் ரவுடிதான் என மாஸ் காட்டுவது, போலீசாரை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்களுடன் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும் மிரட்டி வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் போலீசார் பழைய பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அசோக்கை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story