பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது


பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது
x

தனியார் நிறுவன ஊழியரிடம் பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாதிரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது27). பெங்களூருவில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசு பஸ்சில் திருச்சியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் பஸ்நிலையம் வந்தபோது பையில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி (லேப்டாப்) திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாக்கியராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story