வாலிபர் கைது


வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கைது

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுராம் என்பவரது மகன் பில்ட்ராம் (வயது 35). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து, அங்கு கட்டிட வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பில்ட்ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வரும் நபர் ஒருவர், அங்கு வருபவர்களிடம் பணத்தை பறித்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று அந்த நபர் மது அருந்த வந்த பில்ட்ராமிடம் பணம் தருமாறு கேட்டதோடு, அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளர். அப்போது பில்ட்ராம் தடுத்து உள்ளார்.

பின்னர் டாஸ்மாக் கடை முன்பு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், பில்ட்ராமை அடித்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டாஸ்மாக் கடை ஊழியர் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் அடையாளத்தை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் சூர்யா என்கின்ற சூரிய பிரகாஷ் (வயது25) தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவர் மீது மரணம் என்று தெரியாமல் உயிர் இழப்பை ஏற்படுத்துவது என்ற சட்டப்பிரிவு 304 (2) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story