செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்


செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்
x

அரக்கோணம் அருகே செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த பெரிய கைனூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 19). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரக்கோணம் செல்வதற்காக கைனூர் ரெயில்வே கேட் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், செல்வத்தின் விலை உயர்ந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து செல்வம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைனூர் ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த அந்தோணி (21) என்பதும், செல்வத்தின் செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story