வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
வடக்கன்குளம் அருகே இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வடக்கன்குள:
வடக்கன்குளம் அருகே இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வாலிபர்
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள யாக்கோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் செல்வம் (வயது 32). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள், செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பழவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வலைவீச்சு
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.