வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ள சூரியகோடு மண்ணறவிளையை சேர்ந்தவர் அப்புக்குட்டன். இவரது மகன் விஜூ (வயது26), கூலித்தொழிலாளி. இவரது தாயும் தந்தையும் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடன் பிறந்தவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால், விஜூ வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் இறப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அறையினுள் விஜூ தூக்கில் ெதாங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜூ கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.