வாகனம் மோதி வாலிபர் பலி


வாகனம் மோதி வாலிபர் பலி
x

வேலகவுண்டம்பட்டி அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி அருகே உள்ள கோனூர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் ரவீன் (வயது 20). இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலகவுண்டம்பட்டி அருகே கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ரவீன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில்‌ தூக்கி வீசப்பட்ட ரவீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் ரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் ரவீன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story