வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

ஆலங்குளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் காளிமுத்து என்ற சின்னராஜ் (வயது 28).

அதே ஊரைச்சேர்ந்தவர் கனகு. அவரது மகன் சரத். இருவரும் ஆலங்குளத்திலிருந்து சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனும், மோட்டார்சைக்கிளும் மோதியதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அப்பகுதியினர் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காஜாமுகைதின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த சரத் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இறந்த காளிமுத்துக்கு திருமணமாகி நிவேதா என்ற மனைவியும், பிறந்து 20 நாளே ஆன ஒரு குழந்தையும் உள்ளனர்.


Next Story