விபத்தில் வாலிபர் பலி
புதுச்சத்திரம் அருகே விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருச்செங்கோடு தாலுக்கா பெரியமணலி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி தங்கம்மாளுடன் (50) மொபட்டில் புதுச்சத்திரம்- ஏளூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வெங்கடேஷின் மொபட்டின் மீது மோதியது. இதில் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மணி (27) படுகாயம் அடைந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் நாமக்கல் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மணி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேஷ் மற்றும் தங்கம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.