டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50), டாக்டர். இவர் கடந்த 3 வருடங்களாக திருவண்ணாமலை தாமரை நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி ஆன்மிக பணி மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கும் திருவண்ணாமலை ராமணாஸ்ரமம் பகுதியை சேர்ந்த மணிமாறன் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாராயணனின் வீட்டிற்கு மணிமாறன் அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிமாறன் கத்தியால் நாராயணனை குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.


Next Story