விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமம், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராசு மகன் பரிமேலழகன்(வயது 23). இவர் சொந்த வேலை காரணமாக ஜெயங்கொண்டம் வந்துவிட்டு மீண்டும் பொன்பரப்பி செல்ல புதுக்குடி ஏரி ஓடை பாலம் பிரிவு பாதை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இலையூர் கண்டியங்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் இளங்கோவன்(27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், பரிமேலழகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த பரிமேலழகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story