விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்
ஆலத்தூர் தாலுகா, மங்கூன் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் அதிகாலை ஆலத்தூர் கேட்-துறையூர் சாலையில் மங்கூனில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சுந்தர்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அதே சாலையில் நடந்த வந்த கரூர் மாவட்டத்தை சோ்ந்த கொத்தனார் குப்புசாமி (48) மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சுந்தர்ராஜ் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், குப்புசாமி கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தாா். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story