விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
வேதாரண்யம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கீழஆறுமுககட்டளை பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் விரபாண்டியன் (வயது 19). இவர் கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வேதாரண்யம் கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி சாலை வெட்டுக்குளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.