சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது...!


சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது...!
x

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.13 டிகிரி பதிவானது.

சென்னை,

தென்மேற்கு பருவமழைத் தொடங்கிய பிறகு தான், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அதுவரையில் வாட்டி வதைக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லை. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் அதிகளவு வெயில் பதிவாகிறது.

இன்றும் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி வெயில் பதிவானது. கடந்த 200 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் சென்னையில் 108 டிகிரி வெயில் பதிவாகுவது 7-வது முறையாகும். அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் பதிவான இடங்கள் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 108.13 டிகிரி (42.3 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 107.6 டிகிரி (42 செல்சியஸ்)

கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

தர்மபுரி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

ஈரோடு - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

கரூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

மதுரை நகரம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

சேலம் - 102.2 டிகிரி (38.9 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)

திருத்தணி - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

வேலூர் - 107.6 டிகிரி (42 செல்சியஸ்)


Related Tags :
Next Story