கிணற்றில் குதித்து ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை


கிணற்றில் குதித்து ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை
x

கிணற்றில் குதித்து ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை அருகே கிணற்றில் குதித்து ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை

கோவை குரும்பபாளையம் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது63). இவர் சரவணம்பட்டி எஸ்.ஆர்.பி.மில்ஸ் பகுதியில் ராயல் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாவித்திரி (50) ஐ.டி. நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சிந்துஜா சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். இவரது கணவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிவதால், சிந்துஜா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ரங்கசாமியை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினார். இந்த நிலையில் அவர், அவர்களது வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை ெசய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரங்கசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரங்கசாமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார்.

அதனால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஆகவே அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story