ஜவுளி வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு


ஜவுளி வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
x

ஜவுளி வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57), ஜவுளி வியாபாரி. கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரி ராஜாஜி நகருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். 3-ந் தேதி அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் சிவக்குமார் வீட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story