வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு


வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 10 July 2023 2:00 AM IST (Updated: 10 July 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாபாரி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் எல்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முகமது ஜாபர்(வயது 61). வியாபாரி. இவருடைய மனைவி தாவுது நிசா(55). இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நிஷா பாத்திமா தனது கணவருடன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இளைய மகள் சையது அலி பாத்திமா தனது கணவருடன் கோவை வடவள்ளியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஜாபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மனைவி தாவுது நிசா மற்றும் 2 மகள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து கவனித்து வந்தனர்.

நகைகள் திருட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவருக்கு மாற்று துணி எடுப்பதற்காக வீட்டிற்கு தாவுதுநிஷா வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து உடனடியாக கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் தாவுதுநிஷா புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வைரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமிபாண்டியன், ஜெகதீசன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களுக்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.


Next Story