ஆசிரியர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு


ஆசிரியர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
x

சாத்தான்குளம் அருகே ஆசிரியர் வீட்டில் 3 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ராஜ்குமார் (வயது 44). இவர் மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பென்சிலா சாத்தான்குளம் அடுத்த சவுக்கியபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். பென்சிலா பண்டாரபுரத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் உள்ளார். நேற்று முன்தினம் பென்சிலா வேலைக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து வீட்டில் இருந்து 3¾ பவுன் நகையை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. மாலை வீ¦டு திரும்பிய பென்சிலா வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்து நகை திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குபதிவு செய்து நகையை திருடிசென்ற மர்மநபரை தேடிவருகிறார்.


Next Story