தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
x

ஆம்பூர் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகையை திருடிச்சென்ற நபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). இவரது மனைவி அறிவுக்கொடி (37). இவர்கள் 2 பேரும் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story