டீக்கடைக்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கடையம் அருகே டீக்கடைக்காரரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மைதீன் பிச்சை மகன் அப்துல் காதர் (வயது 30). இவர் கடையத்தில் டீக்கடை வைத்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கடையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார், அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் ரூ.5500 மற்றும் ஒரு செல்போன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story