தொழிலாளி வீட்டில் நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
x

தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி ராமானுஜம் புதுத்தெருவை சேர்ந்தவர் தனபாலன் மனைவி ராஜம்மாள் (வயது 68). கூலி தொழிலாளி. நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ நகர்ந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜம்மாள் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலிகளை காணவில்லை. வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து தங்க சங்கிலிகளை திருடி சென்றதை அறிந்த ராஜம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story