விவசாயி வீட்டில் பணம், ஆவணங்கள் திருட்டு
விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்து பணம், ஆவணங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
விக்கிரவாண்டி
விவசாயி
வி்க்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(வயது 50). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வாசலில் படுத்து துாங்கினார்.
பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சக்கரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
பணம், ஆவணங்கள் திருட்டு
இதையடுத்து வீட்டின் அறையில் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பத்திரங்கள், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது பற்றி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சக்கரவர்த்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
மேலும் இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் ஆவணங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.