பஸ்சில் பெண்ணிடம் ரூ.97 ஆயிரம் திருட்டு


பஸ்சில் பெண்ணிடம் ரூ.97 ஆயிரம் திருட்டு
x

வள்ளியூரில் பஸ்சில் பெண்ணின் கைப்பையை பிளேடால் கிழித்து ரூ.97 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருநெல்வேலி

வள்ளியூர் தெற்கு:

வள்ளியூரில் பஸ்சில் பெண்ணின் கைப்பையை பிளேடால் கிழித்து ரூ.97 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கியில் அடமானம் வைத்து...

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 50). இவர் திசையன்விளை மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (48). இவர்களுடைய மகள், வள்ளியூர் அக்‌ஷயா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இதற்காக பணத்தேவைக்காக செல்வி தனது 4 பவுன் தங்க நகைகளை வள்ளியூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். பின்னர் செல்வி ரூ.97 ஆயிரத்தை ரொக்கமாக தனது கைப்பையில் வைத்து கொண்டு வள்ளியூர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சிறுமளஞ்சி செல்லும் பஸ்சில் ஏறினார்.

திருட்டு

அப்போது கூட்ட நெரிசலில் மர்மநபர்கள் நைசாக செல்வியின் கைப்பையை பிளேடால் கிழித்து, அதில் இருந்த ரூ.97 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பஸ்சில் இருக்கையில் அமர்ந்ததும் செல்வி தனது கைப்பையை பார்த்தபோது, அது கிழிக்கப்பட்டு பணம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story